தமிழ் சினிமா

அஜித் பட கால்ஷீட்டை தெலுங்குக்கு தந்த நயன்

செய்திப்பிரிவு

தமிழில் ‘கோலமாவு கோகிலா’ ரிலீஸுக்கு தயாராக இருக்கும் நிலையில், அஜித்துக்கு ஜோடியாக ‘விசுவாசம்’, கே.எம்.சர்ஜுனின் புதிய படம் என அடுத்தடுத்து கால்ஷீட் கொடுத்திருந்தார் நயன்தாரா. இந்நிலையில், தமிழ் திரையுலக வேலைநிறுத்தம் காரணமாக, அந்தத் தேதிகளை ‘சைரா நரசிம்ம ரெட்டி’ தெலுங்கு படத்துக்கு வழங்கி விட்டார்.

சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் உருவாகிவரும் இப்படம், 18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரரான உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாறு கதை. இதில் நரசிம்ம ரெட்டியாக சிரஞ்சீவி நடிக்க, அமிதாப் பச்சன், ஜெகபதி பாபு, விஜய் சேதுபதி, கிச்சா சுதீப், நயன்தாரா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இதன் ஷூட்டிங் தற்போது ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.

SCROLL FOR NEXT