தமிழ் சினிமா

விஷால் ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத்

செய்திப்பிரிவு

அறிமுக இயக்குநர் படத்தில் விஷால் ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

விஷால் நடிப்பில் கடந்த 10-ம் தேதி ரிலீஸான படம் ‘அயோக்யா’. வெங்கட் மோகன் இயக்கிய இந்தப் படத்தில், போலீஸாக நடித்தார் விஷால். தெலுங்கில் வெளியான ‘டெம்பர்’ படத்தின் ரீமேக் இது. லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்தது.

விஷால் ஜோடியாக ராஷி கண்ணா நடிக்க, பார்த்திபன், கே.எஸ்.ரவிகுமார், தேவதர்ஷினி, ஆனந்த் ராஜ், வம்சி கிருஷ்ணா, யோகி பாபு, பூஜா தேவரியா, சோனியா அகர்வால் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர்.

இந்தப் படத்துக்குப் பிறகு அறிமுக இயக்குநர் ஆனந்த் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் விஷால். முதலில் இது ‘இரும்புத்திரை 2’ என்று கூறப்பட்டது. ஆனால், தற்போது கதை மாற்றப்பட்டுள்ளது. இந்தப் படத்தில், விஷால் ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார்.

அருள்நிதி ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த ‘கே 13’ சமீபத்தில் ரிலீஸானது. எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில், முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஷ்ரத்தா என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT