சுசீந்திரன் இயக்கத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ள 'ஏஞ்சலினா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தைத் தொடர்ந்து சுசீந்திரன் முற்றிலும் புதுமுகங்களைக் கொண்டு படம் இயக்கத் தொடங்கினார். இதில் புதுமுகங்களோடு சூரியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 'ஏஞ்சலினா' என்று பெயரிடப்பட்டது.
அதன் 90% படப்பிடிப்பு முடிவடைந்தவுடன், 'ஜூனியஸ்' படத்தைத் தொடங்கி முடித்தார். அப்படம் வெளியாகி போதிய வரவேற்பைப் பெறவில்லை. அதனைத் தொடர்ந்து சசிகுமார், பாரதிராஜா நடித்துள்ள 'கென்னடி கிளப்' படத்தை தொடங்கினார். அப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே புதுமுகங்களை கொண்டு இயக்கிய 'ஏஞ்சலினா' படத்தின் பணிகளை மீண்டும் தொடங்கியுள்ளார் இயக்குநர் சுசீந்திரன். தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டு, ஜூன் வெளியீடு என்று உறுதிப்படுத்தியுள்ளனர்.
இமான் இசையமைத்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.சூர்யா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆறாம் திணை தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது.