தமிழ் சினிமா

’அயோக்கியாத்தனம்! - பார்த்திபன் ட்வீட்டால் அயோக்யா படக்குழுவினர் அதிர்ச்சி

ஸ்கிரீனன்

'அயோக்யா' படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், பார்த்திபன் ட்வீட்டால் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

வெங்கட்மோகன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘அயோக்யா’. இந்தப் படத்தில் ராஷி கண்ணா, பார்த்திபன், கே.எஸ்.ரவிகுமார், தேவதர்ஷினி, வம்சி கிருஷ்ணா, பூஜா தேவரியா, சோனியா அகர்வால் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் வெளியான ‘டெம்பர்’ தெலுங்குப் படத்தின் ரீமேக் இது.

பைனான்ஸ் சிக்கலைத் தாண்டி மே 11-ம் தேதி வெளியாகியுள்ள இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பார்த்திபன். தற்போது விமர்சன ரீதியாக 'அயோக்யா'வுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் வசூல் அதிகரிக்கும் என்று படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது.

இந்நிலையில், பார்த்திபன் தனது ட்விட்டர் பதிவில் “'அயோக்கியா'த்த்தனம்!, 94-ல் வெளியான என் ginal ginal original 'உள்ளே வெளியே' படத்தை In & out லவுட்டி 'Temper' (Rights பெறாமல்) தெலுங்கில் ஹிட்டாக்கி தமிழிலும் தற்போது! அதில் என்னையும் நடிக்க வைத்து என்ன ஒரு 'அ-தனம்'? குற்ற உணர்ச்சி இல்லாமல் எப்படி? வழக்கு செய்யாமல்,பெருமையுடன் பதிவிடுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

படம் வெளியாகியுள்ள இச்சமயத்தில் போய் இவ்வாறு தெரிவித்துள்ளாரே என்று படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். பார்த்திபன் இயக்கி, நடித்து தயாரித்து 1993-ம் ஆண்டு வெளியான படம் 'உள்ளே வெளியே' என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT