தமிழ் சினிமா

ஜெயம் ரவி ஜோடியாக தாப்ஸி

செய்திப்பிரிவு

அஹமது இயக்கும் படத்தில், ஜெயம் ரவி ஜோடியாக நடிக்க தாப்ஸி ஒப்பந்தமாகியுள்ளார்.

ஜெயம் ரவி நடிப்பில் ரிலீஸுக்குத் தயாராகிவரும் படம் ‘கோமாளி’. அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், காஜல் அகர்வால் மற்றும் சம்யுக்தா ஹெக்டே இருவரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.

கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு, கோவை சரளா, பிரேம்ஜி அமரன், ஆஷிஷ் வித்யார்த்தி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் தமிழா’ ஆதி இசையமைக்க, வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.

இது ஜெயம் ரவியின் 24-வது படமாகும். 25-வது படத்தை, லட்சுமண் இயக்குகிறார். ஜெயம் ரவி - லட்சுமண் கூட்டணியில் ஏற்கெனவே ‘ரோமியோ ஜூலியட்’, ‘போகன்’ ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்க, சுஜாதா விஜயகுமார் தயாரிக்கிறார்.

இதைத் தொடர்ந்து, ஜெயம் ரவியின் 26-வது படத்தை அஹமது இயக்குகிறார்.  ‘வாமனன்’, ‘என்றென்றும் புன்னகை’, ‘மனிதன்’ ஆகிய படங்களை இயக்கியவர் இவர். இந்தப் படத்தில், ஜெயம் ரவி ஜோடியாக தாப்ஸி ஒப்பந்தமாகியுள்ளார்.

SCROLL FOR NEXT