உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரிஷப் பந்த் தேர்வு செய்யப்படாததையும், ஜடேஜா பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதையும் இணைத்து மறைமுகமாக கிண்டல் செய்துள்ளார் சி.எஸ்.அமுதன்
உலகக்கோப்பைக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி நேற்று (ஏப்ரல் 15) அறிவிக்கப்பட்டது. அதில் ரவிந்திர ஜடேஜா இடம் பெற்றுள்ளார். அதன்பின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ரவிந்திர ஜடேஜா, " நான் பாஜகவை ஆதரிக்கிறேன்" என்று வெளிப்படையாகத் தெரிவித்தார்.
பாஜகவில் இணைந்ததிற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக பிரதமர் மோடி, தனது ட்விட்டர் பக்கத்தில் "நன்றி ஜடேஜா, உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டதற்கு ஜடேஜாவுக்கு வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், உலகப் கோப்பையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பந்த் தேர்வு செய்யப்படவில்லை. இது தொடர்பாக பலரும் தங்களுடைய அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக கிண்டல் தொனியில் ட்விட்டர் பதிவு வெளியிட்டுள்ளார் 'தமிழ்படம்' இயக்குநர் சி.எஸ்.அமுதன்
ரவீந்திர ஜடேஜாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்துச் சொன்ன பிரதமர் மோடியின் ட்வீட்டைக் குறிப்பிட்டு, "இது தெரிஞ்சுருந்தா நானும்" என்று பதிவிட்டு ரிஷப் பந்த் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தால் ரிஷப் பந்த்தையும், உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தேர்வு செய்து இருப்பார்கள் என்று மறைமுகமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் சி.எஸ்.அமுதன். இந்த ட்வீட்டை பலரும் செம கலாய்ப்பு என்று குறிப்பிட்டுள்ளனர்.