தமிழ் சினிமா

தர்மபிரபு 2-ம் பாகம்: இயக்குநர் முத்துக்குமரன் திட்டம்

ஸ்கிரீனன்

'தர்மபிரபு' படத்தின் 2-ம் பாகத்தை உருவாக்க இயக்குநர் முத்துக்குமரன் திட்டமிட்டுள்ளார்.

விமல், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கன்னிராசி'. இப்படத்தை இயக்கியுள்ளார் முத்துக்குமரன். 'கன்னிராசி' திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை.

தற்போது யோகி பாபு, கருணாகரன், ராதாரவி, மனோபாலா, ஜனனி ஐயர் உள்ளிட்ட பலர் நடிக்கும் 'தர்மபிரபு'  படத்தை இயக்கத் தொடங்கினார் முத்துக்குமரன். இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு, இறுதிக்கட்டப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இப்படத்தின் 2-ம் பாகத்தை உருவாக்கவும் இயக்குநர் முத்துக்குமரன் திட்டமிட்டுள்ளார். இதற்கான கதை தயாராகவும் வைத்திருக்கிறார். 'தர்மபிரபு' படத்தின் டப்பிங் பணிகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகின்றன. அப்பணிகள் அனைத்து முடிந்து மே-8 வெளியிட படக்குழு ஆயத்தமாகி வருகிறது.

மார்ச் 29-ம் தேதி வெளியிடப்பட்ட 'தர்மபிரபு' படத்தின் டீஸருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் விரைவில் வெளியாகவுள்ளது.

SCROLL FOR NEXT