நல்லா இருக்கட்டும் இந்த சங்கமும் கட்டிடமும் என்று நடிகர் சங்கச் செயல்பாடுகள் குறித்து சேரன் காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.
நடிகர் சங்க உறுப்பினர்களின் பிறந்த நாள் வரும் போது, அவர்களுக்கு நடிகர் சங்கம் தொடர்பான செய்திகள் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறுவது வழக்கம். அவ்வாறு இன்று (ஏப்ரல் 26) சமுத்திரக்கனியின் பிறந்த நாளுக்கும் வாழ்த்து சொன்னார்கள்.
இதனை இயக்குநர் சேரன் சாடியுள்ளார். இது தொடர்பான தனது ட்விட்டர் பதிவில், ''வாழ்த்துகள் தம்பிக்கு. நடிகர் சங்கத்துல உறுப்பினர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்வது பாராட்டத்தக்கது.
ஆனால் இதுவரை எனக்கெல்லாம் ஒரு வருஷம் கூட சொன்னதில்லை.. நான் ஆயுள் மெம்பர் வேற. ஹாஹா.. அது கூட அரசியலா.... நல்லா இருக்கட்டும் இந்த சங்கமும் கட்டிடமும்'' என்று சேரன் தெரிவித்துள்ளார்.
'திருமணம்' படத்தைத் தொடர்ந்து, சேரன் நாயகனாக நடித்துள்ள 'ராஜாவுக்கு செக்' படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.