தமிழ்த் திரைத்துறையை வேறு தளத்துக்கு அழைத்துச் சென்றவர் இயக்குநர் மகேந்திரன் என புகழாஞ்சலி செலுத்தியுள்ளார் கனிமொழி.
'முள்ளும் மலரும்', 'ஜானி' உள்ளிட்ட மறக்க முடியாத படங்களைக் கொடுத்த இயக்குநர் மகேந்திரன், உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 79. இவரது மறைவு, தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பாகக் கருதப்படுகிறது.
மகேந்திரன் மறைவு குறித்து திமுகவின் மகளிரணிச் செயலாளர் கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:
‘முள்ளும் மலரும்’, ‘உதிரிப்பூக்கள்’ போன்ற தலைசிறந்த படைப்புகளால் தமிழ்த் திரைத்துறையை வேறு தளத்துக்கு அழைத்துச் சென்ற பெருமை மகேந்திரனுக்கு உண்டு. அவரை இழந்து வாடும் அவர் குடும்பத்தினருக்கும், தமிழ்த் திரைத்துறையினருக்கும் என் ஆறுதல்கள்.
இவ்வாறு கனிமொழி தெரிவித்துள்ளார்.