தமிழ் சினிமா

காவல்துறை அதிகாரியாக இனியா

ஸ்கிரீனன்

'காபி' படத்தில் காவல்துறை அதிகாரியாக இனியா நடித்துள்ளார். இப்படம் மூன்று மொழிகளில் தயாராகவுள்ளது.

'வாகை சூடவா' படத்தின் வழியே தமிழுக்கு அறிமுகமான  இனியா, தொடர்ந்து மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.  இந்நிலையில்,  தற்போது சாய் கிருஷ்ணா இயக்கத்தில் ராகுல் தேவ்,  முக்தா கோட்சே  ஆகியோருடன் இணைந்து ‘காபி’ என்ற  தமிழ் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார். இதுகுறித்து  இனியா கூறியதாவது:

இப்படத்தில் சத்யபாமா என்ற போலீஸ் அதிகாரி கதாபாத்திரம் எனக்கு.  ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள  இப்படம்,  அடுத்த கட்டத்துக்குப் போக வேண்டும் என்ற என் ஆர்வத்துக்கு வலுசேர்க்கும் படமாகவும் இது இருக்கும்.  அதே சமயம் தமிழ் படவுலகில் மீண்டும் அழுத்தமான  ஓர் இடத்தை இப்படம்  எனக்குக் கொடுக்கும். 

அதோடு, மலையாளத்தில்   பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித் நடிக்கும்  ‘தாக்கோல்’ என்ற படத்திலும்,  கன்னடத்தில் சிவராஜ்குமாருடன் இணைந்து  ‘துரோணா’ என்ற படத்திலும் நடிக்கிறேன். ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் முக்கிய படங்களில் இடம்பெற்றிருப்பது பெரும் மகிழ்ச்சி

இவ்வாறு இனியா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT