தமிழ் சினிமா

இது ஒட்டுமொத்த சமூகத்துக்குமான படம்!- ‘தேவராட்டம்’ இயக்குநர் முத்தையா நேர்காணல்

மகராசன் மோகன்

சொந்தம் அறுந்துடக்கூடா துன்னு பாசத்துல சண் டைப் போட்டுக்குறது தான் நம்ம மரபு. ஆனா இன்னைக்கு பல இடங்களில் சொத்துக்காகத்தான் சண்டையே வெடிக்குது. இந்த மண்ணுல நல்லவங்க மட்டும்தான் இருந்தாங்க. அவங்கதான் இருக் கணும். அப்படி இருக்க ஆசைப் படுற விஷயமாகத்தான் இந்த ‘தேவராட்டம்’ படமும் இருக்கும்!’’ என்கிறார், இயக்குநர் முத்தையா.

‘கொம்பன்’, ‘கொடிவீரன்’ வரிசை யில் இயக்குநர் முத்தையாவுக்கு ‘தேவராட்டம்’ 5-து படம். மனித உறவுகள், மண் சார்ந்த வாழ்வியல் என தனது திரைப்படங்கள் வழியே தொடர்ந்து பதிவுசெய்து வருகிறார். இந்த முறை ‘தேவராட்டம்’ திரைப் படம் குறித்து என்ன சொல்கிறார் என்பதை பார்ப்போம்.

ஒரு குறிப்பிட்ட சமூகம் சார்ந்த பக்கமே இயக்குநர் முத்தையா இயங்குகிறார் என்கிற விமர்சனம் உங்கள் மீது இருக்கிறது. தற் போது ‘தேவராட்டம்’ படத்திலும் அப்படித்தான் பேசப்படுகிறது. ஏன் இப்படி?

‘குட்டிப்புலி’, ‘கொம்பன்’, ‘மருது’, ‘கொடிவீரன்’ என இதற்கு முன்பாக நான் இயக்கிய அனைத்து படங்களி லும் தமிழர் பண்பாடு, தமிழ் கலாச் சாரம், தமிழர்களுக்கான மானம் இவற்றைத்தான் பதிவு செய் திருப்பதாக நம்புகிறேன். ஒரு போதும் எனக்குள் சாதீய உணர்வு இருந்ததில்லை. நான் அப்படியான சூழலில் வளர்ந்தவனும் இல்லை.

கடந்த 2015-ம் ஆண்டுக்குப் பிறகுதான் ‘சாதி, சமூகம் சார்ந்த படமா?’ என ஒரு கேள்வி அதிகம் எழ ஆரம்பித்திருக்கிறது. ‘தேவர் மகன்’, ‘பருத்திவீரன்’ திரைப்படங்கள் வந்த நேரத்தில் எல்லாம் இப்படி யாரும் எதுவும் கேட்கவே இல்லை. இப்போது இப்படி ஒரு கேள்வி எழுவதே ஓர் அரசியல். அந்த அரசியலுக்குள் இந்த முத்தையா வர விரும்பவில்லை.

அப்படியென்றால் ‘தேவராட்டம்’ படத்தின் கதைதான் என்ன?

தேவராட்டம் என்ற முறை மன்னர் காலந்தொட்டு இருந்து வரும் ஒரு மரபு. இதை அனைத்து சமூகத் தினரும் பின்பற்றியே வந்திருக் கின்றனர். அது வெற்றிக்கான ஓர் ஆட்டம். அதற்காக நான் பெயரை வெற்றி ஆட்டம் என வைக்க முடி யாது. அதனால்தான் படத்தில் கவுதம் கார்த்திக் கதாபாத்திரத்தின் பெயரை வெற்றி என வைத்துவிட்டு, படத்துக்கு தேவராட்டம் என வைத்தேன்.

இது ஒரு சமூகத்துக்கான பட மல்ல. ஒட்டுமொத்த சமூகத்துக்கு மான படமாகத்தான் பார்க்க வேண்டும். மற்றபடி இதனை வேறு எந்த ஒரு விஷயத்துக்குள்ளும் இணைத்து பார்க்க வேண்டாம். நான் அடிப்படையில் ஒரு டீக் கடைக்காரன். எனக்கு பாகுபாடெல் லாம் பார்க்கத்தெரியாது. எனக்குத் தெரிந்த, நான் வளர்ந்த, என் மக்கள் வாழ்க்கைமுறையை கவ னித்த முறையில் படைப்புகளை கொடுக்கிறேன். அதை மக்களும் நல்ல முறையில் வரவேற்று வரு கின்றனர்.

மண் மற்றும் உறவுகள் சார்ந்த பதிவு என்கிறீர்கள். இதில் கவுதம் கார்த்திக் வழக்கறிஞராக வருகிறார். என்ன தொடர்பு?

படித்தவர்கள் ஒதுங்கிப்போகா மல் இங்கே எல்லாவற்றையும் தட்டிக் கேட்க முன்வர வேண்டும் என ஆசைப்படுகிறேன். சட்டம் தெரிந்த ஒருவன் நியாயத்தை மீறுபவனை தண்டிக்கும்போது அதில் ஓர் அர்த் தம் இருக்கும். அதனால்தான் கதா பாத்திரத்தை அப்படி அமர்த்தி னேன். படத்தின் மையமே அக்கா, தம்பி உறவின் உன்னதம்தான். பாட்டி, அம்மா, மகன், மாமன் என ஒவ்வொரு விஷயமாக ஒவ்வொரு படத்தில் சொல்லி வருகிறேன். இந்தப் படத்தில் அக்கா, தம்பி பாசம் பிரதானமாக இருக்கும். அதுவும் 6 அக்கா, ஒரு தம்பி எப்படி இருக்கும்னு பார்த்துக்கோங்க. அதேபோல எப்பவுமே பாரம்பரி யத்தை சொல்லும்போது அதில் கொஞ்சம் ட்ரெண்டிங் விஷயத்தை சேர்த்தால்தான் எடுபடும். அந்த வேலையைத்தான் இந்தப் படம் செய்யும்

மஞ்சிமா மோகனுக்கு என்ன வேலை?

அவர் வழக்கறிஞராக வர் றாங்க. மதுரை பொண்ணு. விருது நகர், சிவகங்கை பக்கம் எந்த மாதிரி ஓர் இளம்பெண் இருப் பாங்களோ அதை அப்படியே வெளிப்படுத்திருக்காங்க.

அரிவாள், கத்தி பிடித்து வன் முறையாக ஆடும் கதைக்களத்தையே தொடர்ந்து கையாள்கிறீர்களே?

இன்றைய சூழலில் இங்கே நேதாஜி மாதிரி ஓர் ஆற்றல் தேவைப்படுகிறது. இங்கே தினம் தினம் அவ்வளவு அட்டூழியங்கள் நடக்கின்றன. அப்படி இருப்பதால் தான் 7 வயது சிறுமி எல்லாம் பாலி யல் வன்கொடுமைக்கு ஆளாகி இறக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. இவற்றையெல்லாம் எடுத்துப் பேச ஒரு தனி மனிதன் வேண்டும். அந்த தனி மனிதனின் கோபமாகத்தான் என் படத்தில் இந்த வெற்றி கதாபாத்திரம் இருக்கும்.

சமீபத்தில்தான் அக்கா, தம்பி உறவை பிரதானமாகக்கொண்டு ‘கடைக்குட்டி சிங்கம்’ என்ற படம் வந்ததே?

இங்கே ஒவ்வொரு விஷயத்து லேயும் நேர்மறை, எதிர்மறை என 2 பக்கங்கள் உண்டு. நான் எப்போதுமே என் படங்களில் நேர்மறையான பின்னணியை மட்டுமே தொடுவேன். ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் அக்காக்கள் தம்பியை பாடாய் படுத்துவார்கள். ‘தேவராட்டம்’ படத் தில் அக்காக்கள் தம்பியை பாட லாய் கொண்டாடுவார்கள். பாசத் தால் குளிக்க வைப்பார்கள்.

சூர்யாவை வைத்து படம் இயக் கப்போவதாக முன்பே செய்திகள் வந்தன. அந்தப்படம் என்ன ஆனது?

‘கொடிவீரன்’ படத்தின் படப் பிடிப்பு நேரத்தில்தான் அந்தப் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போ ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் சூர்யா பிஸியாக இருந்தார். அதன் பிறகு நான் ‘தேவராட்டம்’ படத்துக் குள் வந்தேன். அவரும் கே.வி.ஆனந்த் படத்தில் நடிக்க புறப்பட்டு விட்டார். இப்படியே நகர்கிறது. தற் போது அவரிடம் கதை சொல்வதற் கான சூழலை உருவாக்கி வரு கிறேன்.

SCROLL FOR NEXT