தமிழ் சினிமா

இந்தி மற்றும் தெலுங்கில் ரீமேக் ஆகிறது ‘தடம்’

செய்திப்பிரிவு

மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய், ஸ்மிருதி வெங்கட், தன்யா ஹோப், வித்யா ப்ரதீப், சோனியா அகர்வால், பெப்ஸி விஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'தடம்'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அருண் விஜய் நாயகனாக நடித்த படங்களிலேயே, அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையையும் 'தடம்' நிகழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை தொடர்ந்து இந்த ஆண்டு இறுதியில் மீண்டும் அருண் விஜய் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்க முடிவு செய்துள்ளார் மகிழ் திருமேனி.

இந்நிலையில் ’தடம்’ திரைப்படம் இந்தி மற்றும் தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தி ரீமேக்கில் ஷாஹித் கபூரூம், தெலுங்கில் ராம் போத்தினேனி நாயகனாக  நடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

ஷாஹித் கபூர் நடிக்கும் கபிர் கான் படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. இதுவும்  தெலுங்கில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ’அர்ஜுன் ரெட்டி’ படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT