தமிழ் சினிமா

அம்பேத்கர் வழியில் பயணிக்க வேண்டிய அவசியத்தை உணரத் தொடங்குவோம்: இயக்குநர் பா.ரஞ்சித்

செய்திப்பிரிவு

புரட்சியாளர் அம்பேத்கர் வழியில் பயணிக்க வேண்டிய அவசியத்தை உணரத் தொடங்குவோம் என, இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

சட்டமேதை பி.ஆர். அம்பேத்கரின் பிறந்த நாள் விழா நாடு முழுவதும் இன்று (ஏப்.14) கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது நினைவாக இயக்குநர் பா.ரஞ்சித், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது:

"சுதந்திரம் பெற்ற பின் சாதி ஏற்றத் தாழ்வுகள் களையப்படும் என்ற சொன்ன எல்லா தலைவர்களும் மறைந்தே போனார்கள்.

ஆனால் இன்றும், இந்தத் தேர்தலிலும் சொந்த சாதி ஓட்டு எண்ணிக்கையின் அடிப்படையில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ள மத-சாதியவாத அமைப்பினர்களும், முற்போக்கு அமைப்பினர்களும், அரசியலில் வெற்றி மட்டுமே இலக்கு என்று முனைப்பு காட்டும் இந்த நேரத்தில் "சமூக சீர்திருத்தம் அடையாமல் அரசியல் சீர்திருத்தம் அடைந்தும் பயனில்லை" என்று அன்றே ஓங்கி உரைத்த "நவீன இந்தியாவின் தந்தை" புரட்சியாளர் அம்பேத்கர் வழியில் பயணிக்க வேண்டிய அவசியத்தை உணரத் தொடங்குவோம்! ஜெய்பீம்!!!"

இவ்வாறு பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT