தமிழ் சினிமா

பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு: கவிதை மூலம் பார்த்திபன் சாடல்

ஸ்கிரீனன்

பணம் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடுவதை கவிதை மூலமாக தனது ட்விட்டர் பக்கத்தில் சாடியுள்ளார் பார்த்திபன்

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் இன்று (ஏப்ரல் 16) மாலையுடன் முடிவடைகிறது. ஏப்ரல் 18-ம் தேதி தமிழகத்தில் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இதனால் அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பல்வேறு இடங்களில் தேர்தல் ஆணையம் நடத்திய சோதனையில், கட்டுக்கட்டாகப் பணம் சிக்கியது. சில கட்சிகளுக்கு ஓட்டுக்குப் பணம் அளிக்கும் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகின.

இந்நிலையில், பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்க வேண்டாம் என்று நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''மாம்பழமோ? மாபெரும் பழமோ? பழம் தின்று கொட்டை போட்ட அரசியல்வாதிகளுக்கு, தேர்தல்= தேத்துதல் (பணம்). வஞ்சரத்தை வாங்கிக்கொண்டு நெத்திலியை உங்களுக்கு வீசுகிறார்கள். அதுகூட திமிங்கல வேட்டைக்கே. காசு வாங்காமல் ஓட்டு போடுவோம்-மேலிடத்தில் ரூபா வாங்காத கட்சிக்கு!

ஓட்டைப்  போடாதீர்கள்
ஓட்டைப்  போடாதீர்கள்
வல்லரசாகப் போகும்
இந்தியாவின் கூகுள்
வரைபடத்தில்
ஓட்டைப்  போடாதீர்கள்
தேர்தல் வந்துடுச்சி
துட்டுக்கு ஓட்டைப்போட்டு
நம் பிள்ளைகளின்
ஆரோக்கிய வாழ்வில்
(Scan report-டில்)
ஓட்டைப்  போடாதீர்கள்'' என்று பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT