மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஹீரோ' படத்தில் பைக் ரேஸராக நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
'Mr.லோக்கல்' படத்தைத் தொடர்ந்து மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் அர்ஜுன், கல்யாணி ப்ரியதர்ஷன், இவானா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
இப்படத்தில் பைக் ரேஸராக நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இதற்காக பிரத்யேக பயிற்சிகள் எல்லாம் செய்தது மட்டுமன்றி, கொஞ்சம் உடலமைப்பை மாற்றியுள்ளார். சமீபத்தில் இவர் நடித்த பிரம்மாண்ட சண்டைக்காட்சி ஒன்றையும் படமாக்கியுள்ளனர்.
யுவன் இசையமைத்து வரும் இப்படத்துக்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இப்படத்தைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்காக பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கும் தேதிகள் ஒதுக்கவுள்ளார் சிவகார்த்திகேயன்.
ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'Mr.லோக்கல்' திரைப்படம் மே 1-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.