தமிழ் சினிமா

இப்போதுதான் அந்த ஹோட்டலில் இருந்த வந்தேன், அங்கு குண்டுவெடிப்பா? - ராதிகா அதிர்ச்சி ட்வீட்

செய்திப்பிரிவு

நடிகை ராதிகா கொலம்போ நகரில் தங்கியிருந்த ஹோட்டலில் குண்டுவெடிப்பு நடந்தது குறித்து அவர் ட்விட்டரில் அதிர்ச்சி வெளிப்படுத்தியுள்ளார்.

இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் என அடுத்தடுத்து 6 இடங்களில் நடந்த பயங்கர குண்டுவெடிப்புகளில் 40 பேர் பலியாகியுள்ளனர். 250 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் கொலம்போ நகரில் உள்ள சினாமன் கிராண்ட் என்கிற ஹோட்டலில் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. நடிகை ராதிகா குண்டுவெடிப்புக்கு சில மணி முன்னர் தான் அந்த ஹோட்டலிலிருந்து வெளியேறியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "அடக் கடவுளே. இலங்கையில் குண்டுவெடிப்புகள். எல்லோருக்கும் கடவுள் துணை நிற்கட்டும். இப்போதுதான் கொலம்போவில் சினாமன் கிராண்ட் ஹோட்டலிலிருந்து வெளியேறினேன். அங்கு குண்டுவெடிப்பு நடந்துள்ளது. என்னால் இதை நம்ப முடியவில்லை. அதிர்ச்சியாக உள்ளது" என்று பகிர்ந்துள்ளார்.

ராதிகாவின் இந்த ட்வீட்டுக்கு பல ரசிகர்கர்களும், சக நடிகர்களும் பதிலளித்துள்ளனர். அதில் குறிப்பாக, இதேபோலத்தான் இலங்கையில் செல்வி படப்பிடிப்பின் போது சுனாமியிலிருந்து தப்பினீர்கள். இப்போது இது. நீங்கள் மிகவும் அதிர்ஷ்டக்காரர், கடவுள் உங்களைக் காப்பாற்றியுள்லார் என சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT