தமிழ் சினிமா

மூன்றாவது முறையாக விஷாலுக்கு ஜோடியாக லட்சுமி மேனன்

செய்திப்பிரிவு

பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன் திரைப்படங்களைத் தொடர்ந்து, நடிகை லட்சுமி மேனன் மீண்டும் விஷாலுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.

இயக்குநர் சுசீந்திரன் இயக்கிய பாண்டிய நாடு திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்திருந்தார். படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, நான் சிகப்பு மனிதன் திரைப்படத்திலும் விஷாலுக்கு ஜோடியானார். தற்போது, வேந்தர் மூவீஸ் தயாரிப்பில், சுசீந்திரன் இயக்கும் அடுத்த படத்திலும் லட்சுமி மேனனே விஷாலுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.

முன்போல, தொடர்ந்து மூன்று திரைப்படங்களில் ஒரே நடிகருக்கு ஜோடி சேர்வது தற்போது நடப்பதில்லை. இது ராசியான ஜோடி என கருதப்படுமா என்பது இப்படம் வெளியானவுடன் தெரியும்.

SCROLL FOR NEXT