தமிழ் சினிமா

விஜய் சேதுபதியைச் சந்தித்த கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர்

செய்திப்பிரிவு

விஜய் சேதுபதியை, தமிழக கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர் சந்தித்துள்ளார்.

விஜய் சேதுபதி உருவாகியுள்ள படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. ‘ஆரண்ய காண்டம்’ படத்துக்குப் பிறகு இந்தப் படத்தை இயக்கியுள்ளார் தியாகராஜன் குமாரராஜா. ஃபஹத் ஃபாசில், இயக்குநர் மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன், சமந்தா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தை, தியாகராஜன் குமாரராஜாவே தயாரித்துள்ளார். வருகிற 29-ம் தேதி இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது. எனவே, படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் இறங்கியுள்ளது படக்குழு.

இந்நிலையில், தமிழக கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர், விஜய் சேதுபதியை சந்தித்துள்ளார். அவருடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ள விஜய் சங்கர், “மக்கள் செல்வனை சந்தித்ததில் மகிழ்ச்சி #ரசிகனின்தருணம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

வருகிற 23-ம் தேதி தொடங்கவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடுகிறார் விஜய் சங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT