தமிழ் சினிமா

மற்றவர்கள் சொல்வதைக் காட்டிலும் மேலானவர் அஜித்: ஜிப்ரான் புகழாரம்

ஸ்கிரீனன்

மற்றவர்கள் சொல்வதைக் காட்டிலும் மேலானவர் அஜித் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் புகழாரம் சூட்டியுள்ளார் ஜிப்ரான்

'விஸ்வரூபம்', 'தூங்காவனம்', 'மாயவன்', 'ராட்சசன்' உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து, தற்போது முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார் ஜிப்ரான். தற்போது, கமல் தயாரிப்பில் உருவாகும் படங்களுக்கு ஜிப்ரான் தான் இசையமைப்பாளர் என்று உறுதியாகச் சொல்லலாம். அந்தளவுக்கு கமலுடன் நெருக்கம் காட்டி வருகிறார்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் கார்த்தி நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்துக்கு ஜிப்ரான் தான் இசையமைப்பாளர். தற்போது அஜித் நடித்து வரும் 'நேர்கொண்ட பார்வை' படத்தை இயக்கி வருகிறார் ஹெச்.வினோத். ஆனால், அப்படத்துக்கு யுவன் இசையமைத்து வருகிறார்.

இருப்பினும், 'நேர்கொண்ட பார்வை' படத்தின் படப்பிடிப்புகளுக்கு இடையே அஜித்தை சந்தித்து பேசியுள்ளார் இசையமைப்பாளர் ஜிப்ரான். இந்த சந்திப்பு குறித்து ஜிப்ரான் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

ஒரு உண்மையான அஜீத் ரசிகனின் மனநிலையில் இருக்கிறேன். அஜீத் சாரை பற்றி  மற்றவர்கள் என்னவெல்லாம் சொல்வார்களோ அதை காட்டிலும் மேலானவராக இருக்கிறார். பல விஷயங்கள் குறித்து பேசினார். ஆனால் ஒரே ஒரு வார்த்தை என் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.  ‘'நம்ம சேர்ந்து ஒர்க் பண்ணுவோம்' என்பதே அது. நன்றிகள்

இவ்வாறு ஜிப்ரான் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT