ஐபிஎல் போட்டிகளை எதிர்த்து கடந்த வருடம் போராடியவர்கள் இப்போது எங்கே போனார்கள்? என நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார்.
12-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி, இன்று (மார்ச் 23) சென்னையில் தொடங்குகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் முதல் போட்டி இன்று நடைபெறுகிறது. இதனால், சேப்பாக்கமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
கடந்த வருடம் சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றபோது, கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்துவிடவில்லை என்பதற்காக, சென்னையில் கிரிக்கெட் போட்டிகளை நடத்தக்கூடாது எனப் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் போராட்டம் நடத்தின. இதனால், சென்னையில் நடைபெற வேண்டிய போட்டிகள், புனே மைதானத்துக்கு மாற்றப்பட்டன.
எனவே, ஐபிஎல் போட்டிகளை எதிர்த்து கடந்த வருடம் போராடியவர்கள் இப்போது எங்கே போனார்கள்? என நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார்.
“இன்று #ஐபிஎல்12 விமர்சையாக துவக்கம். போன வருடம் போராடிய தமிழர் நலவிரும்பிகள் ஏன் இந்த வருடம் காணோம்? ஒருவேளை தமிழ்நாட்டில் காவிரி கரைபுரண்டு ஓடுவதால், கர்நாடக பெங்களூரு அணியும், தமிழ்நாடு சென்னை அணியும் கிரிக்கெட் ஆடுவதற்கு இப்பொழுது யாருக்கும் ஆட்சேபமில்லையோ? #கிரிக்கெட்அரசியல்” என ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார் கஸ்தூரி.