தமிழ் சினிமா

கோழியை சிக்கனாகவும் ஆடுகளை மட்டனாகவும் பார்க்கிறோம்!- ‘பக்ரீத்’ பட இயக்குநர் ஜெகதீசன் சுபு நேர்காணல்

நா.இரமேஷ்குமார்

மிருகங்களை மையமாக வைத்து பல படங்கள் தமிழ் சினிமாவில் வந்துள்ளன. ஆனால், திடீரென்று படத்தின் போஸ்டர் மூலமாகவே பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கிய படம் ‘பக்ரீத்'. தனது படத்துக்கு ஒட்ட கத்தை மையமாகக் கொண்டு புதிய களத்தை தேர்ந்தெடுத்துள்ளார் ஜெகதீசன் சுபு. இணையத்தில் இப்படத்தின் டீஸருக்கு கிடைத்த வரவேற்பில் ஏகப்பட்ட மகிழ்ச்சியில் இருந்தவரிடம் பேசிய தில் இருந்து:

‘பக்ரீத்’ என்ன கதை?

நம்ம கிராமத்துல பார்த்தீங்கன்னா ஒரு செடியோட கிளையைக் கூட அநாவசியமா உடைக்க மாட்டாங்க. நான் அடிப்படையில் கிராமத்துலேயிருந்து வந்ததுனால அந்த உணர்வை என்னால புரிஞ் சுக்க முடிஞ்சது. ‘புல் தரை மீது நடக்காதீர்கள்’, ‘பூக்களைப் பறிக் காதீர்கள்’ன்னு பலகையில் எழுதி வெச்சு நகரத்துப் பூங்காக்களில் பாதுகாக்கிற நிலைமைதான் இங்கே இருக்கு. ஆனா, கிராமத்துல அடுத்தவங்க வயல்னா கூட வரப்புலதான் நடந்து போவாங்க. செடி, கொடிகளை எல்லாம் ஒரு உயிரா பார்க்கிற, உணர்கிற மனசு விவசாயிகளுக்குதான் உண்டு.

அந்த மாதிரி அன்பும், நெகிழ்ச்சி யுமா மனைவி, மகள், விவசாயம்னு வாழ்ந்துட்டு இருக்கிற ஒருவனிடம் ஒட்டகம் கிடைக்கும்போது, அதை அவன் எப்படி எல்லாம் அக்கறையா பார்த்துக்கறான்? அந்த ஒட்டகத் துக்கு இங்கே இருக்கிற சூழ்நிலை எப்படி ஒத்துவராமல் போகுது? அதோட உணவு பிரச்சினைகள்னு எல்லாம் உணர்ந்து அந்த ஒட்டகம் எங்கே இருக்கணும்னு நினைச்சு, அங்கேயே அதைக் கொண்டு போய் சேர்க்கிறதுதான் கதை. ஜெயிக்கிற எல்லா படங்களிலும் பல விஷயங்கள் பிரமாதமா இருந் தாலும், திரைக்கதை நல்லா இருந்தா ஒரு படம் ஹிட்டாகும்னு நம்பறவன் நான். அதனால இந்தக் கதைக்கு அவ்வளவு விறுவிறுப் பான ஒரு திரைக்கதை அமைஞ்சுது.

நம்ம படங்கள்ல பாலைவனத் துல நடக்கிற கிளைமாக்ஸ் சண்டைக் காட்சிகளுக்கும், ரொமான்ஸ் பாடல் காட்சிகளுக்கும் தான் இதுவரைக்கும் ஒட்டகத்தைப் பயன்படுத்தி இருக்காங்க. ஆனா, ஒட்டகத்தை முதல்முறையா படம் முழுக்கவே மையமா வெச்சு எடுத் திருக்கோம். அந்த வகையில் ‘பக்ரீத்’ இந்திய சினிமாவுக்கே புதுசு. விக்ராந்தும், அவரோட மனைவியா வசுந்தராவும் நடிச்சிருக்காங்க. இவங்க கூடவே படம் முழுக்க ‘சாலா’ன்ற ஒட்டகமும் நடிச்சிருக்கு.

விலங்குகளை வெச்சு படமெடுக் கும்போது நிறைய பிரச்சினைகள் வருமே?

சென்னை, கோவா, மும்பை, ராஜஸ்தான்னு பல இடங்கள்ல ஷூட்டிங் போச்சு. படத்தோட ஆரம் பத்துலேயே முழு ஸ்கிரிப்ட்டையும் விலங்குகள் நல வாரியத்துல கொடுத்து அனுமதி வாங்கிட்டோம். ஒட்டகத்தை எந்தவிதத்துலேயுமே கதையில் கஷ்டப்படுத்தலைன்னு புரிஞ்சுக்கிட்டாங்க. ஷூட்டிங் ஆரம் பிக்கிறதுக்கு முன்னாடி 2 மாசம் விக்ராந்த் ஒட்டகத்தோட பழகி னார். ஷூட்டிங் தொடங்கறதுக்கு முன்னாடியே எங்கள்ல ஒருத்தரா ஒட்டகமும் மாறிடுச்சு. அதுக்கான சாப்பாடு எல்லாம் ஸ்பெஷலா ராஜஸ்தான்ல இருந்து வரவழைச்சு பார்த்துக்கிட்டோம். துவரைச் செடி, ஜவ்வரிசி செடிகளை காயவெச்சு, தூளாக்கி தர்றாங்க. ஒட்டகத்தோட விருப்ப உணவு இதுதான்.

நீங்க பழக்கப்படுத்தியது ஒரு இடத்துலேயிருந்து பக்ரீத்துக்கு குர்பானி கொடுப்பதற்காக இங்கு கொண்டுவரப்படுகிற ஒட்டகமா?

இல்லை சார்... படத்தோட பேரு ‘பக்ரீத்’னு சொன்னதும் நிறையப் பேரு அப்படித்தான் நினைக்க றாங்க. ஆனா ‘பக்ரீத்’ தலைப்புக்கும் இந்தக் கதைக்கும் நிறைய ஒற்றுமை இருக்கு. பொதுவா முஸ்லிம் நண் பர்கள் இருந்தாலே அவங்க என் னமோ தினம் தினம் பிரியாணி சாப்பிடுறவங்கன்னு நினைச்சுக் கிட்டே இருக்கிற மனநிலைதான் நம்மகிட்ட இருக்கு.

பக்ரீத், ரம்ஜான்னு சொன்னாலே நாம அவங்களுக்கு வாழ்த்துகளைச் சொல்றதை விட, அவங்ககிட்ட பிரியாணி கேட்கறதுதான் அதிகம். நம்ம மனசுல அவங்களோட பண் டிகை அப்படிதான் பதிஞ்சிருக்கு. அதே மாதிரி ராஜஸ்தான்னு சொன் னதுமே, அங்கே தினம் தினம் ஒட்டகக் கறிதான் சாப்பிடுவாங் கன்னு நினைச்சுட்டு இருக்கோம்.ஆனா, அங்கே அந்த மாதிரியெல் லாம் கிடையவே கிடையாது. இங்கே தெருவுக்கு ரெண்டு கறிக் கடைகள் இருந்துச்சுன்னா அதே தெருவுல பத்து, பதினைஞ்சு பிரி யாணி கடைகள் முளைச்சிருக்கு. அங்கே சைவம்தான் பெரும்பான் மையா இருக்கு. அந்த ஊர்ல ஒட்டகத்தை அவ்வளவு அன்பா பார்த்துக்கறாங்க. நாம கிராமத்துல மாடுகளை எப்படி நம்ம வீட்டுல ஒரு உறுப்பினரா நினைக்கி றோமோ அதே மாதிரிதான் அங்கே ஒட்டகத்தைக் கொண்டாடு றாங்க.

இந்த கதையோட தொடக்கப் புள்ளி எப்படி தோணுச்சு?

‘பக்ஷி’ன்னு திரைப்பட விழாக் களுக்காக ஒரு படம் பண்ணேன். அந்தப் படத்துக்காக ராஜஸ்தான் போயிருந்தப்போது ஒட்டகம் எனக்கு புதுசா இருந்துச்சு. சென்னை யில் இருந்து நாம பக்கத்துல இருக் கிற வேற மாநிலத்துக்குப் போனாலே அங்கே இருக்கிற உணவுமுறை நமக்கு ஒத்துவரா துன்னு ரெண்டு நாள் பயணத்துல தவியாய் தவிச்சுடறோம். அப்போ அங்கே இருக்கிற ஒட்டகம் இங்கே வந்தா என்ன பாடுபடும்னு யோசிச் சப்ப கிடைச்ச கதைதான் இது. கூடவே விவசாயத்தையும் இணைச் சேன்.

பொதுவா நாம கோழியை சிக்க னாகவும், ஆடுகளை மட்டனாகவும் பார்த்தே பழகிட்டோம். பூனைகள்ல ஆரம்பிச்சு கோழி, ஆடுன்னு ஐந்தறிவு இருக்கிற இந்த மிருகங்கள் எல்லாமே நம்மளை ஆறறிவு இருக்கிற மனுஷனா மட்டும்தான் பார்த்துட்டு இருக்கு. நாம மட்டும்தான் அதையெல்லாம் சாப்பிடுற உணவா பார்க்குறோம். இந்தப் படத்துக்கு அப்புறமா நமக்கெல்லாம் வீட்டுல இருக் கிற பூனைகள்ல இருந்து எல்லா விலங்குகள் மேலேயும் பாசம் அதிகரிக்கும்னு நினைக் கிறேன்.

SCROLL FOR NEXT