தமிழ் சினிமா

படப்பிடிப்பில் மகனுடன் சண்டை போடும் விஜய் சேதுபதி: வைரலாகும் வீடியோ

செய்திப்பிரிவு

படப்பிடிப்பில் மகனுடன் விஜய் சேதுபதி சண்டை போடும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சிந்துபாத்’. இந்தப் படத்தை எஸ்.யு.அருண் குமார் இயக்கியுள்ளார். ‘பண்ணையாரும் பத்மினியும்’ மற்றும் ‘சேதுபதி’ படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய் சேதுபதி - அருண் குமார் கூட்டணி இணைந்துள்ளது.

‘சிந்துபாத்’ படத்தில் ஹீரோயினாக அஞ்சலி நடித்துள்ளார். ‘இறைவி’ படத்தில் ஏற்கெனவே இருவரும் இணைந்து நடித்துள்ளனர். ராஜராஜன் மற்றும் ஷான் சுதர்சன் இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

கடந்த ஜனவரி 16-ம் ம் தேதி விஜய் சேதுபதியின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. மொத்தப் படப்பிடிப்பும் முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் படத்தில், விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படப்பிடிப்பின்போது விஜய் சேதுபதியும் சூர்யாவும் சண்டை போட்டுக்கொள்ளும் வீடியோ தற்போது வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஏற்கெனவே விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘நானும் ரெளடிதான்’ படத்தில், விஜய் சேதுபதியின் சின்ன வயது கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT