செல்வகண்ணன் இயக்கத்தில் அலெக்ஸ், அஞ்சலிநாயர், ‘பூ' ராம் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘நெடுநல்வாடை’. இப்படத்துக்கு விமர்சனரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதைத் தொடர்ந்து, இதற்கு நன்றி தெரிவிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. ஒட்டுமொத்த படக்குழுவும் கலந்து கொண்ட இவ்விழாவில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது:
இப்படத்தில் செல்வகண்ணன் என்னை உருக்கி விட்டார். இந்த வாழ்க்கை செல்வகண்ணன் அவர் களுக்கு மட்டும் அல்ல; எனக்கும் பொருந்தும். குடும்பத்தில் ஒரு இருமுகிற தாத்தா இருந்தால் எவ்வளவு நல்லது தெரியுமா? ஒரு கிழவி இருந்தால் எவ்வளவு நம்பிக்கை தெரியுமா? கிழவனும் கிழவியும் இருப்பது ஒரு குடும்பத்துக்கு எவ்வளவு பாதுகாப்பு?
தம்பி செல்வகண்ணன் எனக்கு ஊதியம் தர வில்லை என்றார். ‘‘தம்பி நீ எனக்கு இந்தப் படத்தை விட பெரிய ஊதியம் தரமுடியுமா? ஒரு இயக்குநர் மேடையில் கவிஞனின் வரிகளுக்கு கண்ணீர் சிந்தி யிருக்கிறான் என்றால் அதைவிட எனக்குப் பெரிய ஊதி யம் ஏது? இந்தப் படத்தில் ஒரு நல்ல நடிகன் கிடைத் திருக்கிறான். நல்ல இசை அமைப்பாளர் கிடைத்திருக் கிறார். அதைவிட இந்த ‘நெடுநல்வாடை' படம் மூலமாக 50 தயாரிப்பாளர்கள் கிடைத்திருக்கிறார்கள்.
செல்வகண்ணனுக்கு நான் இலக்கிய உலகம் சார்பாக நன்றி சொல்கிறேன். தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்ற நிலையில், இரண் டாயிரம் ஆண்டுக்கு முன்பு வெளிவந்த ஓர் இலக் கியத்தின் தலைப்பை இந்த டிஜிட்டல் யுகத்தில் ஓர் இளைஞன் வைத்திருக்கிறான் என்றால் தமிழின் பெருமையைப் பாருங்கள். நல்ல தலைப்பு வேண்டு மென்றால் என்னிடம் வாருங்கள். நான் கொடுக் கிறேன்!” இவ்வாறு வைரமுத்து பேசினார்.