தமிழ் சினிமா

தமிழக மக்களின் உணர்வே என் உணர்வு: பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக இளையராஜா கருத்து

செய்திப்பிரிவு

தமிழக மக்களின் உணர்வே என் உணர்வு என்று பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சியில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளை, ஒரு கும்பல் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியிருக்கும் செய்தி தமிழகத்தையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் பலமாக ஒலித்து வருகின்றன.

இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் தங்களுடைய எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், கிண்டியில் மகளிர் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் இசையமைப்பாளர் இளையராஜா.

அவரிடம் பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு "தமிழக மக்களின் உணர்வு எப்படி இருக்கிறதோ, அதோடு நானும் இருக்கிறேன். தமிழ்நாட்டு மக்கள் இது போல் இன்னொன்று நடக்கக் கூடாது என்கிறார்கள். அது தான் எனது உணர்வும்" என்று இளையராஜா பதிலளித்தார்.

SCROLL FOR NEXT