தமிழ் சினிமா

மீண்டும் ரிலீஸாகிறது சேரனின் ‘திருமணம்’

செய்திப்பிரிவு

சேரன் இயக்கத்தில் வெளியான ‘திருமணம்’ படம், மீண்டும் ரிலீஸாகிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சேரன் இயக்கி, நடித்த படம் ‘திருமணம்: சில திருத்தங்களுடன்’. உமாபதி ராமையா, தம்பி ராமையா, காவ்யா சுரேஷ், சுகன்யா, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, ஜெயப்பிரகாஷ், பால சரவணன், அனுபமா குமார் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

ரமேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்த இந்தப் படத்தை, பொன்னுவேல் தாமோதரன் எடிட் செய்துள்ளார். பாடல்களுக்கு சித்தார்த் விபின் இசையமைக்க, சபேஷ் - முரளி பின்னணி இசை அமைத்தனர்.

இந்தப் படம் கடந்த மார்ச் 1-ம் தேதி வெளியானது. இந்தப் படத்துடன் சேர்ந்து வேறு சில படங்களுடம் வெளியானதால், இதற்கு போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை. போதுமான திரையரங்குகளும் கிடைக்கவில்லை. எனவே, படத்தை மறுபடியும் ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளனர்.

அதன்படி, வருகிற ஏப்ரல் 12-ம் தேதி ‘திருமணம்’ மறுபடியும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது. 75 திரையரங்குகளில் இந்தப் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT