'கோலமாவு கோகிலா' இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'Mr.லோக்கல்' பணிகளை முடித்துவிட்டார் சிவகார்த்திகேயன். மே 1-ம் தேதி வெளியீட்டு தயாராகி வருகிறது. தற்போது மித்ரன் இயக்கத்தில் உருவாகும் 'ஹீரோ' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன்.
இதன் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் அர்ஜுன், கல்யாணி ப்ரியதர்ஷன், இவானா உள்ளிட்ட பலர் சிவகார்த்திகேயனுடன் நடித்து வருகிறார்கள். யுவன் இசையமைக்கும் இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்து வருகிறது.
'ஹீரோ' படத்தைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்திலும், பாண்டிராஜ் இயக்கும் படத்திலும் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் சிவகார்த்திகேயன். தற்போது ஒப்பந்தமாகியுள்ள அனைத்து படங்களையும் முடித்துவிட்டு, 'கோலமாவு கோகிலா' இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க முடிவு செய்துள்ளார் சிவகார்த்திகேயன்.
இப்படத்தில் நடிப்பது மட்டுமன்றி, 'சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் மூலம் தயாரிக்கவும் திட்டமிட்டு இருக்கிறார். இதன் பணிகள் இந்தாண்டு இறுதியில் அல்லது அடுத்தாண்டு தொடக்கத்தில் துவங்கப்படவுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் நெல்சன் இயக்குநராக இருந்த போது, அவரிடம் பணிபுரிந்தவர் தான் சிவகார்த்திகேயன். இந்த நன்றியை மறவாமல் தான் 'கனா' படத்தில் தனது கதாபாத்திரத்துக்கு நெல்சன் திலீப்குமார் என்று பெயரிட்டு இருந்தார்