தமிழ் சினிமா

தெற்கை உன்னிப்பாக கவனிக்கிறது பாலிவுட்: ‘தேவ்’ நாயகி ரகுல் ப்ரீத் சிங் நேர்காணல்

கா.இசக்கி முத்து

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். தற்போது சூர்யாவுடன் ‘என்ஜிகே’, கார்த்தியுடன் ‘தேவ்’ என ஒரே நேரத்தில் தமிழில் நடித்தவர், அந்த படங்களின் வருகையை ஆவலோடு எதிர்நோக்கி இருக்கிறார். அவருடன் ஒரு நேர்காணல்..

‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை தொடர்ந்து கார்த்தியுடன் மீண்டும் இணைந்து நடிக்கும் ‘தேவ்’ படம் குறித்து..

‘தேவ்’ ஒரு காதல் கதை. ‘தீரன்’ படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இப்படத்தின் நாயகியான மேக்னா கதாபாத்திரம் தனக்கென உறுதியான கொள் கைகள், கருத்துகள் கொண்ட, தன்னம்பிக்கை மிக்க பெண். கடினமாக உழைத்து, கோடிக்கணக்கில் சம்பாதித்து தனக்கென ஒரு பெயர் பெற்றவள். பார்க்கப்போனால், நிஜத்தில் நானும், இந்த மேக்னா போலத்தான். ஆனால் எல்லா விஷயங்களிலும் அல்ல. மேக்னா சில நேரங்களில் நியாயமாக நடந்துகொள்ள மாட்டாள்.

கார்த்தி, சூர்யாவுடன் நடித்த அனுபவம் பற்றி?

இருவருமே திறமைசாலிகள், நல்ல மனிதர்கள். நான் சூர்யாவின் தீவிர ரசிகையும்கூட. ஆனால், இந்த படங்களில் இருவரது கதாபாத்திரங்களும் நேர் எதிரானவை. கலைஞர்களிடம் முழு நடிப்புத் திறனை பெறக்கூடியவர் இயக்குநர் செல்வராகவன் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவரது இயக்கத் தில் நடித்ததும் நல்ல அனுபவம்.

புதுமுக இயக்குநர்களின் படங்களிலும் நடிக்கிறீர் களே, எப்படி?

எல்லோருமே ஒரு காலத்தில் புதுமுக இயக்குநர், புதுமுக நடிகர்தானே. கார்த்தி மூலமாகத்தான் இந்த படம் பற்றி எனக்கு தெரியவந்தது. ‘‘இளம் இயக்கு நர் ஒருவர் கதை கூறியிருக்கிறார். நீங்கள்தான் அதில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்று கருதுகிறார். கதை கேட்டுப் பாருங்கள்’’ என்றார். அதன் பிறகே கதை கேட்டேன். எனக்கு மிகவும் பிடித் தது. ஒரு ரொமான்டிக் படத்தில் நடிக்க வேண்டும் என்ற என் ஆசை, இந்த படம் மூலம் நிறைவேறியது.

சமீபத்தில் நீங்கள் ஒருவரை திட்டியது ட்விட்ட ரில் சர்ச்சை ஆனதே..

பெண் என்பதாலேயே ‘எதுவும் பேசாதே. அமைதி யாக இரு’ என்று சொல்லி வளர்ப்பார்கள். அதற்காக, பேச வேண்டிய நேரத்தில்கூட பேசாமல் இருந்துவிடக் கூடாது. என் அனுமதியின்றி எடுக்கப்பட்ட புகைப் படத்தை போட்டு, அருவருக்கத்தக்க வகையில் கருத்து கூறியிருந்ததால்தான் காட்டமாக திட்டினேன். அதற்கு முன்புதான் மகளிர் சமத்துவம், உரிமைகள் பற்றி ஒரு நிகழ்ச்சியில் பேசிவிட்டு வந்தேன். பொதுவில் வாய் கிழியப் பேசிவிட்டு, நிஜத்தில் இப்படி எதிர்வினை ஆற்றாமல் விட்டால் சரியா? என் பதில் விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கலாம். அதே நேரம், இனி ஒரு பெண்ணை அவர் இவ்வாறு விமர்சிக்கமாட்டாரே. அது போதும் எனக்கு.

தமிழ், தெலுங்கு இரண்டிலும் மாறி மாறி நடிக் கிறீர்கள். படங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்?

தெலுங்கில் 16 படங்கள் நடித்துவிட்டேன். இப் போது அந்த அளவுக்கு நடிப்பதில்லை. அதனால், தமிழில் நான் அதிக கவனம் செலுத்துவதாக நினைக்கலாம். ஆனால், அப்படி எதுவும் இல்லை. என் மனதில் அப்படி எந்த கட்டுப்பாடும் இல்லை. தமிழ், தெலுங்கு என்று பார்ப்பதில்லை. நல்ல கதைகளை மட்டுமே தேர்வு செய்கிறேன்.

தென்னிந்தியாவில் இருந்து இந்தி திரையுல குக்கு சென்று முன்னேறுவது கடினமாக இருக்கிறதா?

கடினம் - எளிது என்பதல்ல விஷயம். ஸ்ரீதேவி அந்த காலத்திலேயே பாலிவுட்டில் பெரிய நட்சத்திர மாக ஜொலித்தவர். ஹைதராபாதில் இருந்து சென்ற தபு, பாலிவுட்டில் பிரபலமானார். சமீபத்தில் தாப்ஸி அங்கு பெரிய நட்சத்திரம் ஆகியுள்ளார். இதெல்லாம் ‘பாகுபலி’க்கு முன்பே நடந்ததுதான். ‘பாகுபலி’க்கு பிறகு நிலைமை இன்னும் மாறிவிட்டது. அதன் தாக் கம் அற்புதமானது. தெற்கில் தயாராகும் எல்லா படங் களையும் பாலிவுட் கவனித்துக் கொண்டிருக்கிறது. தற்போது இங்கும் அங்குமாக பரஸ்பரம் பல படங் கள் ரீமேக் ஆகின்றன. இன்று எல்லாம் ஒரு தளத் தில் வந்துவிட்டன. படங்கள் மட்டுமல்லாமல், திறமைகள் பரிமாற்றமும் நடக்கிறது. எதுவுமே எளிது அல்ல. கடினமாக உழைக்க வேண்டும். u தமிழில் கமர்ஷியல் படத்தில் உங்களை எப்போது காணலாம்?

எது கமர்ஷியல் என்பது எனக்குப் புரியவில்லை. ‘கேர் ஆஃப் கஞ்சிரபலேம்’, ‘மஹாநடி’ (நடிகையர் திலகம்) போன்ற படங்கள் தெலுங்கில் நன்றாக ஓடின. ஒருவேளை இந்த படங்கள் சில ஆண்டு களுக்கு முன்பு வெளிவந்திருந்தால், கலைப் படங்கள் என்று அழைக்கப்பட்டிருக் கும். அதே படங்கள்தான் இன்று கமர்ஷியல் வெற்றிகளாக மாறி யிருக்கின்றன. கலைப் படம், வணிகப் படம் என்று எதுவும் இல்லை. சினிமாவில் நல்ல படம், மோசமான படம் என்ற ரெண்டுதான் இருக்கின்றன.

SCROLL FOR NEXT