பல்வேறு படங்களில் நாயகனாக நடித்து வந்தாலும், அப்படம் சார்ந்த எந்தவொரு விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியிலும் ஜெய் கலந்து கொள்ளாமல் இருந்தார். தற்போது 'பார்ட்டி', 'நீயா 2', 'கருப்பர் நகரம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.
இனிமேல் தன் படங்களின் விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது என்றும் முடிவெடுத்துள்ளார் ஜெய்.
இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் மத்தியில் ஜெய் கூறியதாவது:
''அஞ்சலியுடன் நெருங்கிப் பழகியது உண்மை. ஆனால் அவர் என் காதலி அல்ல, தோழி தான். எங்களுடைய நட்பு தொடரும். நயன்தாரா எனக்கு ரொம்பப் பிடிச்ச நடிகை. அவரோடு இணைந்து 'ராஜா ராணி' படத்தில் நடித்தேன். அப்போதில் இருந்தே எங்கள் இருவருக்கும் நல்ல நட்பு இருக்கிறது. அவருடன் பல படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசை.
இன்னும் என் திருமணம் குறித்து யோசிக்கவே இல்ல்லை. திருமணம் செய்து கொள்வதாக இருந்தால், கண்டிப்பாக காதல் திருமணம் தான்''.
இவ்வாறு ஜெய் தெரிவித்துள்ளார்.
ஜெய் - அஞ்சலி இருவருமே காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் செய்திகள் வெளியானது. தற்போது ஜெய் கூறியிருப்பதன் மூலம், இச்செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.