தமிழ் சினிமா

விறுவிறுப்பான த்ரில்லர், பல திருப்பங்கள் கொண்டது காப்பான்: எடிட்டர் ஆண்டனி

செய்திப்பிரிவு

விறுவிறுப்பான த்ரில்லர், பல திருப்பங்கள் கொண்டது 'காப்பான்' திரைப்படம் என்று எடிட்டர் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரையுலகில் முன்னணி எடிட்டர்களில் ஒருவராக வலம் வருபவர் எடிட்டர் ஆண்டனி. இயக்குநர் ஷங்கர், கே.வி.ஆனந்த், கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோரின் படங்களுக்கு எப்போதுமே எடிட்டராக ஆண்டனி தான் பணிபுரிவார்.

தற்போது தன் எடிட்டிங்கில் உருவாகும் படங்கள் தொடர்பாக, ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

''அடுத்து கண்டிப்பாக ஹிட் ஆகப் போகும் இந்தப் படங்களில் வேலை செய்தது மிக்க மகிழ்ச்சி. 'எல்கேஜி' (அரசியல் - மிக நகைச்சுவையான படம்), '90 எம்.எல்', (பெண்களை மையப்படுத்திய மிக நகைச்சுவையான படம்), 'தேவி 2', (குடும்பத்துக்கான, இரண்டு மடங்கு ஜாலியான படம்), 'வாட்ச்மேன்' (ஒரு வித்தியாசமான முயற்சி, த்ரில்லர்),' கென்னடி க்ளப்' (சுறுசுறுப்பான வெற்றி பெறப்போகும் படம்), 'காப்பான்' (விறுவிறுப்பான த்ரில்லர், பல திருப்பங்கள் இருக்கும்) சூர்யா மற்றும் கே.வி.ஆனந்தின் சிறந்த படைப்பு''.

இவ்வாறு எடிட்டர் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சயிஷா சைகல் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'காப்பான்'. லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் இதனைத் தயாரித்து வருகிறது. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT