'டுலெட்' படத்தை ஏன் பார்க்க வேண்டும் என்பதற்கு படக்குழுவினர் 10 காரணங்களைக் கூறியுள்ளனர்.
முன்னணி ஒளிப்பதிவாளரான செழியன் இயக்குராக அறிமுகமாகி உள்ள படம் 'டுலெட்'. சந்தோஷ் ஸ்ரீராம், சுசீலா, தருண், ஆதிரா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை செழியனே தயாரிக்க, ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்துள்ளார்.
பல்வேறு திரைப்பட விழாக்களில் 32 சர்வதேச விருதுகளையும், மேலும் விருதுக்காக 80 முறை முன்மொழியப்பட்டும் உள்ளது.இன்று (பிப்.21) வெளியாகியுள்ள இப்படத்தை ஏன் பார்க்க வேண்டும் என்பதற்கு 10 காரணங்களை கூறியுள்ளது. அதில் அவர்கள் கூறியுள்ளதாவது:
* சினிமா எடுக்க ரெண்டு கோடியாவது வேணும்
* சினிமான்னாலே ஸ்டார்ஸ் இருக்கணும்
* சினிமான்னாலே 4 பாட்டு, 2 சண்டை அப்புறம் லவ்
* அவார்ட் வாங்கின படம்னாலே போரடிக்கும்.
* நல்ல படம்லாம் தமிழ்ல எடுக்கவே முடியாது.
* சினிமான்னாலே நல்ல மியூஸிக் இருக்கணும்.
* படபடன்னு ஷாட் இருந்தாதான் படம் வேகமாக இருக்கும்
* ஒரு படம்னா நிறைய கேரக்டரஸ் இருக்கணும்.
* காமெடி ட்ராக் கண்டிப்பா இருக்கணும்.
* தமிழ்ல நல்ல படம் எடுத்தா பாக்க மாட்டாங்க
இவ்வாறு படக்குழுவினர் வெளியிட்ட போஸ்டரில் தெரிவித்துள்ளது. 'விதிகளை உடையுங்கள். 'டுலெட் போல 100 தமிழ் சினிமாக்கள் வரட்டும்' என்று அந்த போஸ்டரில் குறிப்பிட்டுள்ளது படக்குழு.