தமிழ் சினிமா

சசிகுமார் படத்தில்  நிக்கி கல்ராணி 

செய்திப்பிரிவு

சசிகுமார் நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் நாயகியாக நடிக்க நிக்கி கல்ராணிஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

'நாடோடிகள் 2' திரைப்படம் வெளியாகும் நிலையில் 'கொம்பு வச்ச சிங்கம்டா', 'கென்னடி கிளப்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்  சசிகுமார். இதனைத் தொடர்ந்து தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். சுந்தர்.சியின் உதவியாளர் கதிர்வேலு இயக்கும் இப்படத்தில் நிக்கி கல்ராணி நாயகியாக நடிக்கிறார்.

மேலும் ராதாரவி, தம்பி ராமையா, விஜய குமார், ரேகா, சுமித்ரா, சதிஷ், மனோபாலா, ரமேஷ் கண்ணா, சிங்கம் புலி, நிரோஷா, யோகி பாபு போன்ற 30க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

இந்தப் படம் சசிகுமாருக்கு 19-வது படமாகும். சசிகுமார் ஐ.டி.யில் பணிபுரியும் நபராக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். செந்தூர் பிலிம்ஸ் சார்பில் டிடி.ராஜா என்பவர் தயாரிக்கிறார். சித்தார்த் ஒளிப்பதிவு செய்ய, சாம்.சிஎஸ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு  பொள்ளாச்சியில் வரும் 11-ம் தேதி முதல் நடைபெற உள்ளது.

SCROLL FOR NEXT