தமிழ் சினிமா

தயாரிப்பாளராகும் காஜல் அகர்வால்

செய்திப்பிரிவு

நடிகை காஜல் அகர்வால், தயாரிப்பாளராகக் களம் இறங்குகிறார்.

பேரரசு இயக்கத்தில் வெளியான ‘பழனி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் காஜல் அகர்வால். பரத் ஹீரோவாக நடித்த இந்தப் படம், 2008-ம் ஆண்டு ரிலீஸானது. அதனைத் தொடர்ந்து, ‘பொம்மலாட்டம்’, ‘நான் மகான் அல்ல’, ‘துப்பாக்கி’, ‘விவேகம்’, ‘மெர்சல்’ எனப் பல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். தமிழின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித் இருவருடன் நடித்துள்ளார் காஜல் அகர்வால்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்திப் படங்களிலும் நடித்துள்ள காஜல் அகர்வால், தற்போது ‘குயின்’ இந்திப் படத்தின் தமிழ் ரீமேக்கான ‘பாரிஸ் பாரிஸ்’ படத்தில் நடித்துள்ளார். ரமேஷ் அரவிந்த் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

இந்நிலையில், கமல்ஹாசன் ஜோடியாக ‘இந்தியன் 2’ படத்திலும் நடிக்கிறார் காஜல். ஷங்கர் இயக்கிவரும் இந்தப் படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. நெடுமுடி வேணு, சித்தார்த் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில், தயாரிப்பாளராகவும் களம் இறங்குகிறார் காஜல் அகர்வால். நானி நடிப்பில் வெளியான ‘Awe’ தெலுங்குப் படத்தை இயக்கிய பிரஷாந்த சர்மா, இந்தப் படத்தை இயக்குகிறார். தெலுங்கில் உருவாகும் இதில் காஜல் அகர்வாலே நடிக்கிறாரா அல்லது வேறு ஹீரோயின் யாராவது நடிக்கிறார்களா என்பது குறித்த விவரம் தெரியவில்லை.

SCROLL FOR NEXT