தமிழ் சினிமா

ஓவியாவின் ‘90 எம்எல்’ படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ்

செய்திப்பிரிவு

ஓவியா நடித்துள்ள ‘90 எம்எல்’ படத்துக்கு, சென்சார் போர்டு ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளது.

‘விசில்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘அழகிய அசுரா’ பாடலைப் பாடியவர் அனிதா உதீப். இவர் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘90 எம்எல்’. பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில், நாயகியாக ஓவியா நடித்துள்ளார்.

பெண்கள் நிஜ வாழ்க்கையில் என்னென்ன நினைக்கின்றனர், எப்படியெல்லாம் வாழ ஆசைப்படுகின்றனர், அவர்களுடைய ஃப்ரெண்ட்ஷிப் எப்படி இருக்கும், காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் அவர்களுடைய எதிர்பார்ப்புகள் என்ன ஆகிய விஷயங்களை வெளிப்படையாகப் பேசும் வகையில் இந்தப் படம் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில், பியூட்டி பார்லரில் வேலை பார்க்கும் துணிச்சலான பெண்ணாக ஓவியா நடித்துள்ளார். இந்தப் படத்தைப் பார்த்த சென்சார் போர்டு உறுப்பினர்கள், படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். காரணம், இரட்டை அர்த்த வசனங்கள் இந்தப் படத்தில் உள்ளன.

சிம்பு இசையமைத்துள்ள இந்தப் படத்தில், மொத்தம் 4 பாடல்கள் உள்ளன. வருகிற 22-ம் தேதி இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாளை (பிப்ரவரி 7) இதன் டீஸர் ரிலீஸாகிறது.

SCROLL FOR NEXT