தமிழ் சினிமா

எங் மங் சங் படத்துக்காக சீனாவில் சண்டைக்காட்சிகள் படப்பிடிப்பு

செய்திப்பிரிவு

பிரபுதேவா நடித்து வரும் 'எங் மங் சங்' படத்துக்காக சீனாவில் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சிகள் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

எம்.எஸ்.அர்ஜுன் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வரும் படம் 'எங் மங் சங்'. வாசன் விஷுவல் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் நாயகியாக லட்சுமி மேனன் நடித்து வருகிறார்.

தங்கர்பச்சான், ஆர்.ஜே.பாலாஜி, சித்ரா லட்சுமணன், 'கும்கி' அஸ்வின், காளி வெங்கட், முனீஸ்காந்த், உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். வில்லனாக 'பாகுபலி' படத்தில் நடித்த பிரபாகர் நடித்து வருகிறார்.

தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட சிக்கலால், சில காலம் படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்தது. தற்போது அனைத்து சிக்கல்களும் சரி செய்யப்பட்டு மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளனர். இப்படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியை சீனாவில் படமாக்கியுள்ளது படக்குழு.

சீனாவில் உள்ள டெங் லெங் இடத்தில் பல்வேறு அரங்குகளை அமைத்து படப்பிடிப்பை நடத்தியுள்ளது படக்குழு. இந்தச் சண்டைக்காட்சியை சில்வா இயக்கியுள்ளார். குங்பூ  மற்றும் சைனீஸ் சண்டைக்கலைஞர்கள் பற்றிய காட்சிகள் கொண்ட படம் என்பதால் அதிக சிரத்தை எடுத்து படமாக்கியுள்ளனர்.

குருதேவ் ஒளிப்பதிவு, அம்ரீஷ் இசை, பிரபுதேவா மற்றும் ரவிகுமார் பாடல்கள் என தொழில்நுட்பக் குழுவினர் பணிபுரிந்து வருகிறார்கள். 'பொன்மாணிக்கவேல்', 'தேள்', 'எங் மங் சங்', 'தேவி 2' ஆகிய படங்களை முடித்துள்ளார் பிரபுதேவா.

நடிப்புக்கு இடையே, சல்மான் கானை வைத்து இயக்கவுள்ள படத்தின் பணிகளையும் பிரபுதேவா கவனித்து வருகிறார்.

SCROLL FOR NEXT