தமிழ் சினிமா

இளையராஜா நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடக்கும்: நடிகர் விஷால் உறுதி 

செய்திப்பிரிவு

இளையராஜா நிகழ்ச்சி திட்டமிட்ட படி நடக்கும், மார்ச் 3-ம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழுவில் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கணக்கு தாக்கல் செய்யப்படும் என்று தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் தெரிவித் துள்ளார்.

சென்னை கோடம்பாக்கத்தில் தயாரிப்பாளர் சங்கத்தின் மாஸ் டரிங் யூனிட் அலுவலக திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் விஷால் கூறியதாவது:

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். சங்கத்தில் நாங்கள் முறைகேடு எதையும் செய்யவில்லை. எல்லாவற்றுக்கும் கணக்கு வைத்துள்ளோம். எனக்கு மறைமுக எதிரி என்று யாரும் கிடையாது. இளையராஜா நிகழ்ச்சிக்கு தடை கேட்டு சிலர் வழக்கு தொடர்ந்துள்ளனர். பிப்.2 மற்றும் 3-ம் தேதி இளையராஜா நிகழ்ச்சி திட்டமிட்டபடி பிரம்மாண்டமாக நடக்கும். முறையாக சங்கத்துக்கு வந்து கணக்கு கேட்டால் பதில் சொல்லத் தயாராக உள்ளோம். மார்ச் 3-ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும். அப்போது சங்கத்தின் கணக்கு தாக்கல் செய்யப்படும்.

புதிதாக திறக்கப்பட்டுள்ள இந்த தயாரிப்பாளர் சங்க அலுவ லகத்தை, சிறு பட தயாரிப்பாளர் கள் இலவசமாக பத்திரிக்கை யாளர் சந்திப்பு, படத்தின் இசை வெளியீடு போன்ற விஷயங் களுக்கு பயன்படுத்திக் கொள்ள லாம். இவ்வாறு தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் கூறினார்.

SCROLL FOR NEXT