தமிழ் சினிமா

பில்போர்ட் பட்டியலில் இடம் பெற்ற ரவுடி பேபி

செய்திப்பிரிவு

'மாரி 2' படத்தின் ரவுடி பேபி வீடியோ பாடல், பில்போர்ட் என்ற சர்வதேசப் பாடல்கள் தரவரிசையில் 4-ம் இடத்தைப் பெற்றுள்ளது.

பில்போர்ட் இசைப் பட்டியல் என்பது, அந்தந்த வாரத்தில் மக்களால் அதிகம் கேட்கப்பட்ட, விரும்பப்பட்ட பாடல்களின் பட்டியலாகும். ரேடியோ, ஸ்ட்ரீமிங், டிஜிட்டல் டவுன்லோட், இசைத்தட்டு என கேட்கப்படும் பாடல்களுக்கென தனி பட்டியல் வாரா வாரம் தயாரிக்கப்படுகிறது. இதோடு, யூடியூபில் இருக்கும் வீடியோ பாடல்களுக்கும் தனிப் பட்டியல் போடப்படுகிறது.

இந்தப் பட்டியலில் தற்போது 'மாரி 2' படத்தின் ரவுடி பேபி வீடியோ பாடல் இடம்பெற்றுள்ளது. தனுஷ், சாய் பல்லவி நடித்திருக்கும் இந்தப் படத்தின் இயக்குநர் பாலாஜி மோகன். இசை யுவன் சங்கர் ராஜா. ரவுடி பேபி பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்திருந்தார். தனுஷ் வரிகள் எழுதியிருந்தார். இந்தப் பாடலில் தனுஷை விட சாய் பல்லவியின் நடனம் அனைவரின் பாராட்டையும் பெற்றது. பாடலில் சாய் பல்லவியின் நடனத்தைத் தாண்டி வேறெதையும் கவனிக்க முடியவில்லை என்ற அளவுக்கு சாய் பல்லவி கலக்கியிருந்தார்.


பில்போர்ட் பட்டியல்

தற்போது இந்தப் பாடல் 8.5 கோடி முறை பார்க்கப்பட்டுள்ளது. பில்போர்ட் பட்டியலில் இடம்பெற்று விட்டதால் விரைவில் ஒரு பில்லியனை எட்டி புதிய சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை எந்தத் தமிழ்ப் பாடலும் இப்படி பில்போர்ட் பட்டியலில் இடம் பெறவில்லை என்று கூறப்பட்டாலும் அதற்கான சரியான தரவுகள் இல்லை. எது எப்படியோ, வை திஸ் கொலவெறி பாடலுக்குப் பின் தனுஷ் இன்னொரு வைரல் ஹிட்டைக் கொடுத்துள்ளார். 

SCROLL FOR NEXT