தமிழ் சினிமா

இளையராஜா 75 விழா: ரஜினி - கமல் கலந்துகொள்ள சம்மதம்

ஸ்கிரீனன்

பிப்ரவரி முதல் வாரத்தில் நடைபெறவுள்ள 'இளையராஜா 75' விழாவில் கலந்து கொள்ள ரஜினி - கமல் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் நடைபெறவுள்ள 'இளையராஜா 75' நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ரஜினி மற்றும் கமல் சம்மதம் தெரிவித்துள்ளார்கள்.

இளையராஜாவின் 75வது பிறந்தநாள் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பாக, 'இளையராஜா 75' எனும் விழா வெகு பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வருகிற பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் இவ்விழா விழா நடைபெறவுள்ளது. 2-ம் தேதி தென்னிந்தியத் திரையுலகின் முக்கியப் பிரபலங்கள் கலந்து கொள்ளும் கலை நிகழ்ச்சியும், 3-ம் தேதி இளையராஜாவின் இசை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

இந்த விழாவுக்கு திரையுலகின் முன்னணி பிரபலங்களை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் மற்றும் முக்கிய உறுப்பினர்கள் நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகிறார்கள். ரஜினி மற்றும் கமல் இருவரையும் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். இருவருமே கண்டிப்பாக வருவதாக உறுதியளித்துள்ளனர்.

SCROLL FOR NEXT