தமிழ் சினிமா

விஜய் சேதுபதிக்கு நாயகியாகும் ராஷி கண்ணா

ஸ்கிரீனன்

விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள படத்துக்கு ராஷிகண்ணா, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நாயகிகளாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

சிம்பு நடித்த 'வாலு', விக்ரம் நடித்த 'ஸ்கெட்ச்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் விஜய் சந்தர். இப்படங்களைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார்.

இவர் தயார் செய்த கதையை தயாரிக்க, விஜயா வாஹினி நிறுவனம் முன்வந்தது. தயாரிப்பு நிறுவனம் முடிவானவுடன், அக்கதையைக் கேட்ட விஜய் சேதுபதியும் நடிக்க சம்மதம் தெரிவித்ததால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் தொடங்கவுள்ளது. இதில் விஜய் சேதுபதிக்கு நாயகிகளாக ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். விஜய் சேதுபதியுடன் நடிக்கவுள்ளதை ராஷி கண்ணா தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகிவரும் 'மாமனிதன்' படப்பிடிப்பை முடித்தவுடன், விஜய் சந்தர் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் விஜய் சேதுபதி. தற்போது விஜய் சேதுபதியுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT