பெரிய வெற்றிடத்தை விட்டுச் சென்றுள்ளார் என்று கருணாநிதிக்கு மோகன்பாபு புகழாஞ்சலி செலுத்தியுள்ளார்.
இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 95. ஆகஸ்ட் 7-ம் தேதி மாலை 6.10 மணிக்கு கருணாநிதியின் உயிர் பிரிந்தது.
கருணாநிதியின் மறைவு குறித்து மோகன்பாபு தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒரு உண்மையான சகாப்தம், மக்களின் தலைவர், எப்போதும் எடுத்துக்காட்டாய் இருந்தவர். கருணாநிதி பெரிய வெற்றிடத்தை விட்டுச் சென்றுள்ளார். சகோதரர்கள் ஸ்டாலின் மற்றும் அழகிரி குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்கள்.
தனது கொள்கைகளின் மூலம் லட்சக்கணக்கான மக்களைச் சென்றடைந்தவர். லட்சக்கணக்கானவர்களுக்கு நம்பிக்கை அளித்தவர், தனது எழுத்தின் மூலம் லட்சக்கணக்கானவர்களுக்கு உந்து சக்தியாய் இருந்தவர்” என்று மோகன்பாபு தெரிவித்துள்ளார்.