படங்களின் வசூலில் ரஜினி அல்லது விஜய் யார் நம்பர் 1 என்ற கேள்விக்கு சாதுர்யமாக பதிலளித்துள்ளார் இயக்குநர் அமீர்
ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது சமூகவலைத்தளத்தில் ரசிகர்களின் சண்டை கடுமையாக இருக்கும். எங்கள் தலைவரோட படம் இந்த சாதனையை நிகழ்த்துவிட்டது என்று ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து கொண்டிருப்பார்கள் ரசிகர்கள்.
இது தொடர்பாக தொலைக்காட்சி பேட்டியில் 'தமிழகத்தின் வசூலில் யார் நம்பர் 1? ரஜினியா அல்லது விஜய்யா?' என்று இயக்குநர் அமீரிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அமீர், "தமிழகத்தின் வசூலை வைத்துப் பார்த்தால் விஜய் தான் நம்பர் ஓன். அவரது வசூலை வைத்து பார்த்தால், ரஜினிகாந்த் நம்பர் டூ தான்.
ஆனால், உலகளவில் உள்ள வசூலை எடுத்துக் கொண்டார் ரஜினி சார் தான் நம்பர் ஓன். அவருக்கு தமிழ்நாட்டைத் தாண்டி ஆந்திரா, ஹைதராபாத், இந்தி திரையுலகம், சீனா, ஜப்பான் என உலகளாவிய மார்க்கெட் இருக்கிறது.
ஆகையால் தமிழகத்தில் விஜய் நம்பர் ஓன், உலகளவில் ரஜினி சார் தான் நம்பர் ஓன்" என்று சாதுர்யமாக பதிலளித்துள்ளார் இயக்குநர் அமீர். இப்பதிலால் ரஜினி மற்றும் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்து, அவர் பேசிய வீடியோவை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.