தமிழ் சினிமா

தளபதி 63 அப்டேட்: விஜய்யுடன் நடிக்க கதிர் ஒப்பந்தம்

ஸ்கிரீனன்

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க கதிர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள 'தளபதி 63' படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக சென்னையில் அரங்குகள் அமைக்கும் பணியைத் தொடங்கியுள்ளார் கலை இயக்குநர் முத்துராஜ்.

அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா, விவேக், யோகி பாபு நடிப்பது மட்டுமே முடிவாகி இருந்தது. இவர்களோடு மேலும் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது, இப்படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க கதிர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

2018-ல் வெளியான 'பரியேறும் பெருமாள்' படத்தின் மூலம் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றவர் கதிர். 'விக்ரம் வேதா' படத்தில் மாதவன், விஜய் சேதுபதி ஆகியோருடன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து இப்படத்தில் விஜய்யுடன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளது படக்குழு. இதனை அதிகாரபூர்வமாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ரூபன் எடிட் செய்கிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது.

SCROLL FOR NEXT