தமிழ் சினிமா

’பேட்ட’ நான் நீண்ட நாட்களாக காத்திருந்த ரஜினி படம்: தினேஷ் கார்த்திக்

செய்திப்பிரிவு

'பேட்ட' திரைப்படம் தான் நீண்ட நாட்களாகக் காத்திருந்த ரஜினி படம் என்று கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி, விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, சசிகுமார்,  நவாசுதீன் சித்திக் ஆகியோர் நடிப்பில் 'பேட்ட' திரைப்படம் வியாழக்கிழமை வெளியாகியது.

இப்படம் குறித்து பிரபலங்கள் பலரும் பதிவிட்டு வருகிறார்கள். அந்த வரிசையில் இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் 'பேட்ட' படத்தைப் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து  தினேஷ் கார்த்திக் தனது ட்விட்டர் பக்கத்தில், ” ‘பேட்ட’ நான் நீண்ட நாட்களாகக் காத்திருந்த ரஜினி படம். ஒரு திரைப்படத்தைப் பார்த்துவிட்டு  வெளியே வரும்போது சிரித்த முகத்துடன் வந்தால் அந்தப் படம் உங்களுக்கு எவ்வளவு பிடித்திருக்கும் என்பது தெரியும். இம்மாதிரியான அற்புதமான ரஜினி படத்தை எடுத்ததற்கு கார்த்திக் சுப்பராஜுக்கு வாழ்த்துகள். சிறந்த பின்னணி இசை அனிருத். இப்படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் பாராட்டுகள்” என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT