தமிழ் சினிமா

விஷாலை கரம்பிடிக்கப் போவதாக அறிவித்த நடிகை அனிஷா

செய்திப்பிரிவு

விஷால் - அனிஷா இருவரும் தங்களின் திருமணத்தை அதிகாரபூர்வமாக உறுதி செய்திருக்கிறார்கள்.

 நடிகர் விஷாலின் திருமணம் தொடர்பாக பல்வேறு செய்திகள் வெளியான வண்ணம், இருந்தன. அனிஷா என்ற பெண்ணை திருமணம் செய்யவுள்ளார் என்று செய்திகள் வெளியாகி, பெண்ணின் புகைப்படமும் வெளியானது. இதற்கு விஷால் மறுப்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று (ஜனவரி 15) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனிஷா ரெட்டி என்ற நடிகை, விஷாலுடனான திருமணத்தை உறுதி செய்துள்ளார். இவர் தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'அர்ஜுன் ரெட்டி' படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர் என்பது நினைவுக் கூரத்தக்கது.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஷாலுடன் எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்து, தங்களுடைய திருமணத்தை உறுதி செய்துள்ளார். திருமணம் எப்போது என்று விசாரித்த போது, "விரைவில் ஆந்திராவில் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாகவும், புதிய நடிகர் சங்க கட்டிடத்தில் இந்த திருமணம் நடைபெறும்" என்றும் விஷால் தரப்பு தெரிவித்தது.

தற்போது வெங்கட் மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் 'அயோக்யா' படத்தில் நடித்து வருகிறார் விஷால். அதனைத் தொடர்ந்து சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

SCROLL FOR NEXT