தமிழ் சினிமா

ராஜாவின் இசை எப்போதும் என்னுடன் இருக்கிறது: விஷால்

செய்திப்பிரிவு

ராஜாவின் இசை எப்போதும் என்னுடன் இருக்கிறது என நடிகரும் தயாரிப்பாளருமான விஷால் தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜாவின் 75-வது பிறந்த நாளை, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் பிரம்மாண்டமான முறையில் கொண்டாட ஏற்பாடு செய்து வருகிறது. ‘இளையராஜா 75’ என்ற இந்த நிகழ்ச்சி, வருகிற பிப்ரவரி 2 மற்றும் 3-ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில், நேற்று (ஜனவரி 9) சென்னை மகேந்திரா சிட்டியில் இதன் தொடக்க விழா மற்றும் டிக்கெட் விற்பனை நடைபெற்றது. அதில், இளையராஜா, தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

அதில் பேசிய விஷால், “ராஜாவின் இசை எப்போதும் என்னுடன் இருக்கிறது. சந்தோஷம், துக்கம் என எல்லா நேரத்திலும் அவருடைய இசையைத்தான் கேட்கிறேன். தயாரிப்பாளர் சங்கத்துக்குப் பூட்டு போடும் போராட்டம் நடந்தபோது கூட, காரில் ராஜா இசையைத்தான் கேட்டேன்.

பிப்ரவரி 2-ம் தேதி அனைத்து மொழிக் கலைஞர்களும் கலந்து கொள்ளும் பாராட்டு விழா நடைபெறுகிறது. தமிழக முதல்வர், ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினி, கமல், எஸ்.பி.பி. என பல விஐபிகளை அழைக்க இருக்கிறோம்.

தான் இசையமைத்த பாடல்களுக்குக் கிடைக்கும் ராயல்டியில் ஒரு தொகையை தயாரிப்பாளர்கள் சங்க அறக்கட்டளைக்குத் தர இளையராஜா ஒப்புக் கொண்டுள்ளார்” என்றார்.

SCROLL FOR NEXT