தமிழ் சினிமா

ஹாரிஸ் ஜெயராஜ் இசை குறித்து ஏன் கிண்டல் செய்கிறீர்கள்? - பாடகர் ஹரிசரண்

ஸ்கிரீனன்

ஹாரிஸ் ஜெயராஜ் இசை குறித்து ஏன் கிண்டல் செய்கிறீர்கள் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பாடகர் ஹரிசரண் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஹாரிஸ் ஜெயராஜ்.. 2019-ல் 'தேவ்', 'காப்பான்', 'துருவ நட்சத்திரம்' உள்ளிட்ட பல படங்கள் வெளியாகவுள்ளது.

சமீபகாலமாக அவருடைய பாடல்கள் குறித்து, பலரும் கிண்டல் செய்து வந்தார்கள். அவருடைய இசைக் கிண்டல் தொடர்பான வீடியோவை பல லட்சம் பார்த்திருந்தனர்.

இது தொடர்பாக ஹாரிஸ் ஜெயராஜிடம் கேட்ட போது, "ஒரே மாதிரி நான் 7 பாடல்கள் செய்திருப்பதாக சொன்னார். என்னால் 2000 பாடல்களுக்கு மேல் பண்ண முடியும்" என்று அவர் தெரிவித்த போதும் தொடரும் கிண்டல்கள் தொடர்பாக பாடகர் ஹரிசரண் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

’’ஏன் பல ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சிகளில் ஹாரிஸ் ஜெயராஜ் இசை பற்றி பேசப்படுகிறது என்று எனக்குத் தெரியவில்லை. அவரது இசை எளிமையானது, வலிமையானது. அவரது பாடலில் சப்தங்கள் துல்லியமாக இருக்கும். இத்தனை வருடங்களாக அவரது பாடல்கள் ரசிகர்கள் உடனடியாகச் சென்றடைந்து வருகிறது’’இவ்வாறு ஹரிசரண் தெரிவித்துள்ளார்’.

SCROLL FOR NEXT