தமிழ் சினிமா

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்

செய்திப்பிரிவு

சர்வதேச திரைப்பட விழாக்களில் கவனம் ஈர்த்து வருகிறது இயக்குநர் வஸந்தின் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படம்.

இயக்குநர் வஸந்தின் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’

திரைப்படம் மும்பை திரைப்பட விழாவுக்கு பிறகு 23-வது கேரள சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு, பாராட்டுகளைக் குவித்தது. தற்போது ஸ்வீடனில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வு செய்யப்பட்டு வெளியாகியுள்ளது

இதற்கிடையில், புனேயில் கடந்த வாரம் நடந்த சர்வதேச திரைப்பட விழாவிலும் வெளியாகி பார்வையாளர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றது

இத்திரைப்படத்தில் பார்வதி, லட்சுமி ப்ரியா சந்திரமவுலி, காளீஸ்வரி சீனிவாசன், கருணாகரன், ‘மயக்கம் என்ன’ சுந்தர், கார்த்திக் கிருஷ்ணா, மாரிமுத்து, மாஸ்டர் ஹமரேஷ், நேத்ரா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். என்.கே.ஏகாம்பரம் - ரவிசங்கரன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்துள்ளார். இத்திரைப்படத்தில்  பின்னணி இசை இல்லாதது மும்பை திரைப்பட விழாவில் பெரிதும் பாராட்டு பெற்றது. எழுத்தாளர்கள் அசோகமித்திரன், ஆதவன், ஜெயமோகனின் சிறுகதைகளைக் கொண்டு திரைக்கதை உருவாக்கி, இயக்குநர் வஸந்த் எஸ்.சாய் இத்திரைப்படத்தை இயக்கி தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT