தமிழ் சினிமா

உற்சாகத்தில் ரகுல்

செய்திப்பிரிவு

கார்த்தியுடன் இணைந்து ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ள ‘தேவ்’ படம் ரிலீஸாக உள்ள நிலையில், சூர்யாவுடன்  இணைந்து நடித்துள்ள ‘என்ஜிகே’ (நந்த கோபாலன் குமரன்) படத்தின் படப்பிடிப்பையும் முடித்திருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங்.

‘‘திறமையானவர்களின் இயக்கத்தில் நடிப்பது, ஒரு நல்ல பாடம் படிப்பது போல. செல்வராகவனின் இயக்கத்தில் ‘என்ஜிகே’ படத்தில் நடிக்கும்போது, அந்த அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அது சிறந்த அனுபவமாக அமைந்தது. அதிலும், எனக்குப் பிடித்த பாசமான மனிதர் சூர்யாவுடன் இணைந்து நடித்ததும் மகிழ்ச்சி. ‘தேவ்’ படம் போலவே ‘என்ஜிகே’வும் எப்போது ரிலீஸ் ஆகும் என ஆவலோடு காத்திருக்கிறேன்’’

என்று, படப்பிடிப்பை முடித்த குஷியில் கூறியிருக்கிறார் ரகுல்.

‘என்ஜிகே’ படப்பிடிப்பை முடித்த சூர்யா, தற்போது பஞ்சாபில் கே.வி.ஆனந்த் இயக்கிவரும் ‘காப்பான்’ படப்பிடிப்பில் இருக்கிறார். அதன் படப்பிடிப்பும் பிப்ரவரி இறுதிக்குள் முடிய இருக்கிறது. அதைத் தொடர்ந்து, ‘இறுதிச்சுற்று’ இயக்குநர் சுதா கொங்கராவின் படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT