தமிழ் சினிமா

இந்தியன் 2 அப்டேட்: முக்கியக் கதாபாத்திரத்துக்கு ஆர்யாவுடன் பேச்சுவார்த்தை

ஸ்கிரீனன்

'இந்தியன் 2' படத்தில் கமலுடன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் ‘இந்தியன்’. பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படத்தின் 2-ம் பாகத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்தது. லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.

ஷங்கர் இயக்கத்தில் கமல், காஜல் அகர்வால், நெடுமுடி வேணு ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ஒளிப்பதிவாளராக ரவிவர்மன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

இப்படத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு. அக்‌ஷய்குமார், அஜய் தேவ்கன், சிம்பு, சித்தார்த், அபிஷேக் பச்சன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செய்திகள் வெளியாகின.

இது தொடர்பாக படக்குழுவினரிடம் விசாரித்த போது, "சிம்புவுக்குப் பதிலாக சித்தார்த் நடிக்கவுள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. மேலும், ஆர்யாவிடம் பேசியுள்ளோம். படப்பிடிப்புக்கான தேதிகளை முழுமையாக முடிவு செய்த பின் தான், யாரெல்லாம் நடிக்கவுள்ளார்கள் என்பதை முறையாக அறிவிப்போம்" என்று தெரிவித்தார்கள்.

எழுத்தாளர்கள் ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணகுமார் மூவரும் இணைந்து 'இந்தியன் 2' படத்துக்கான வசனங்களை எழுதியுள்ளனர்.

SCROLL FOR NEXT