தமிழ் சினிமா

ஆபாசமான கிண்டலுக்குப் பதிலடி: சர்ச்சைக்கு ரகுல் ப்ரீத் சிங் விளக்கம்

செய்திப்பிரிவு

ஆபாசமான கிண்டலுக்குப் பதிலடி கொடுத்தது சர்ச்சையானதால் அதுகுறித்து ரகுல் ப்ரீத் சிங் விளக்கம் அளித்துள்ளார்

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். இந்தியிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழில் கார்த்தியுடன் 'தேவ்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் பிப்ரவரி 14-ம் தேதி வெளியீட்டுக்கு ஆயுத்தமாகி வருகிறது.

எப்போதுமே, ட்விட்டர் செயல்பாடுகளில் மிகவும் மும்முரமாக இருப்பார் ரகுல் ப்ரீத் சிங். தனது படம் குறித்த அறிவிப்புகள், விளக்கங்கள் என அனைத்தையும் ட்விட்டரிலேயே தெரிவித்து வந்தார்.

இந்நிலையில், காரில் இருந்து இறங்கும் ரகுல் ப்ரீத் சிங் புகைப்படம் ஒன்றுக்கு ரசிகர் ஆபாசமாக கருத்து தெரிவித்திருந்தார். அவருக்குப் பதிலடியாக அவரது அம்மாவைக் குறிப்பிட்டு கடுமையாக சாடினார் ரகுல் ப்ரீத் சிங்.

ஒரு சிலர் அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், பலர் இதற்காக அம்மாவைக் குறிப்பிட்டு இவ்வளவு காட்டமாக ரகுல் ப்ரீத் சிங் கருத்து தெரிவித்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக ரகுல் ப்ரீத் சிங், “எனது நெறிகளை கேள்வி கேட்பவர்களே, பெண்கள் காட்சிப் பொருளாக மாற்றப்படும் போது பேசுங்களேன். அப்படி ஆபாசமாகப் பேசும் கேவலமானவர்கள் தங்களுக்கும் குடும்பம் இருக்கிறது. 

அவர்களுக்கு இப்படி நடந்தால் எப்படி இருக்கும் என்பதையெல்லாம் புரிய வைக்கதான் எனது வார்த்தைகளை தேர்ந்தெடுத்து நான் பேசினேன். கண்டிப்பாக அவரது அம்மாவும் கண்டிப்பாக அவரை அறைந்திருப்பார்” என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT