தமிழ் சினிமா

தமிழகம் உங்கள் இழப்பை கண்டிப்பாக உணரும்: கருணாகரன் புகழாஞ்சலி

செய்திப்பிரிவு

தமிழகம் உங்கள் இழப்பை கண்டிப்பாக உணரும் என்று கருணாநிதிக்கு கருணாகரன் புகழாஞ்சலி செலுத்தியுள்ளார்.

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 95. ஆகஸ்ட் 7-ம் தேதி மாலை 6.10 மணிக்கு கருணாநிதியின் உயிர் பிரிந்தது.

கருணாநிதியின் மறைவு குறித்து கருணாகரன் தனது ட்விட்டர் பக்கத்தில்,”இன்றைய சூரிய அஸ்தமனம் நம்மை கண்ணீர் கடலில் தத்தளிக்கவைத்து விட்டது. தமிழகம் உங்கள் இழப்பை கண்டிப்பாக உணரும்” என்று கருணாகரன் தெரிவித்திருக்கிறார்.

SCROLL FOR NEXT